
யாழ்.வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் 135 குடும்பங்களுக்கு உணவுக்கான அரிசி வழங்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 371,000 ரூபா பெறுமதியான அரிசியே வழங்கப்பட்டது.
குடும்பத்தில் ஒரு அங்கத்தவர் இருந்தால் 7 கிலோவும், இரண்டு அங்கத்தவர்களுக்கு 10 கிலோவும், மூன்று அங்கத்தவர்களுக்கு 12 கிலோவும், நான்கு அங்கத்தவர்களுக்கு 15 கிலோவும் வழங்கப்பட்டன.
இவ்வாறு அரிசி வழங்கும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி
செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம்(26) 135 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow Us



