கட்டட அனுமதி இல்லாத வணிக நிலையங்களுக்கு ஒரு வருடகால அவகாசம்: பருத்தித்துறை பிரதேச சபை தீர்மானம்!

கட்டட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குவதாக பருத்திதுறை பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுக்தீஸ் தலைமையில் இன்று(29) இடம்பெற்றது.

இதன்போது, கட்டட அனுமதி பெறப்படாமல் கட்டிடங்களை அமைத்து வியாபரம் செய்வோருக்கு அதற்கான வியாபார அனுமதி வழங்க வேண்டாம் என்று ஆளுநரிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒருவருடத்திற்குள் கட்டட அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருதங்கேணி பகுதியில் சபை அனுமதி பெறப்படாமல் தனியார் நிதி நிறுவனம் ஓன்று இயங்குவதாகவும், அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version