இலங்கைவடக்கு மாகாணம்

அதிகரிக்கப்போகும் மின்சார கட்டணம்!

2026 ஆண்டுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன்போது, ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57% அதிகரிப்பு தேவை என்று சபை தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்ட ஆவணங்களின்படி, இந்த முன்மொழிவு ஜனவரி முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்திற்கான மின்சார கட்டணங்களை உள்ளடக்கியது.

இது வீட்டு, மத, தொழில்துறை, வணிக மற்றும் பிற நுகர்வோர் பிரிவுகளில் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் நிலையான மாதாந்திர கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும்.

இந்த நிலையில், குறித்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தபடுமாயின் வீட்டு மின்சார நுகர்வோரின் அனைத்து நுகர்வு தொகுதிகளிலும் யூனிட் விகிதங்கள் மற்றும் நிலையான கட்டணங்கள் இரண்டிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button