இலங்கைவடக்கு மாகாணம்
Trending

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. பயிர் நிலங்களில் வெள்ளம் நிறைந்துள்ளது.

நாவற்குழி பகுதிகளில் சிறிய இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், நாவற்குழி மகாவித்தியால இடைத்தங்கல் முகாமுல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் கொடிகாமம் போக்கட்டி றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், கொடிகாமம் நாவலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button