
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட யாழ்.தையிட்டி திஸ்ஸவிகாரை அகற்ற கோரி இன்று(03) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



தையிட்டி திஸ்ஸ விகாரையில் புத்தரின் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், காணிகளின் உரிமையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என பலரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



இதன்போது நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த்தோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவுகளில் உள்ளவர்களின் பெயர்களையும் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தனர்.



போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு செல்லும் வாகனங்களின் சாரதி அனுமதிப்பத்திரம் பரிசீலிக்கப்பட்டதோடு, அவர்களின் பெயர்களையும் பொலிஸார் பதிவு செய்தனர்.






