கடற்கொந்தளிப்பு காரணமாக வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் இறங்கி நீராடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் நேற்றைய தினமும் சில சுற்றுலாப் பயணிகளில் கடலில் இறங்கி நீராடினர்.
வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு அமைந்துள்ளது.

இருந்தபோதிலும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் இந்த கடற்கரை பாதுகாப்பற்ற கடலாக காணப்படுவதால் குறித்த காலப்பகுதிகளில் கடலில் நீராட இறங்க வேண்டாம் என பிரதேச சபை தவிசாளர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
இருந்த நிலையில் நேற்றைய தினம் தவிசாளர் மற்றும் ஊர்மக்களின் எச்சரிக்கையையும் மீறி சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் இறங்கி நீராடினர்.

திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!
மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் அமாஷி டி சில்வா!
மாணவர்களுக்கு 15 முதல் சீருடைகள்!
அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை!