அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.

போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக பரிசீலனை நடைபெறும் வரை இந்த இடைக்கால தடை உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரனும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி கௌசல்யாவும் ஆயிராகியிருந்தனர்.

Exit mobile version