
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி மதுரோவிற்கு பாதுகாப்பாக இருந்த 32 கியூபா நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட 32 கியூபர்களுக்கு கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் துக்கதினத்தை அறிவித்துள்ளார்.
நேற்றும் இன்றுமாக அந்த துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அமெரிக்கப் படைகள் மதுரோவையும் அவரது மனைவியையும் தாக்கி சிறைபிடித்தபோது 32 “துணிச்சலான கியூப போராளிகள்” இறந்ததாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மதுரோவின் நீண்டகால சோசலிச நண்பரான கியூபா, இரண்டு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow Us



