
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(05) இடம்பெற்றுள்ளது.
சுண்டிக்குளம் சிறு கடலில் இரால் பிடிப்பதற்காக கேவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன் போது அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்டிருந்த கட்டு துவக்கு எனப்படும் வெடி மருந்தில் சிக்கியுள்ளார்.
காயமடைந்தவர் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், கருப்பையா பத்மநாதன் என்னும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Follow Us



