இலங்கைவடக்கு மாகாணம்
Trending

குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது நினைவேந்தல்!

சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(5) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அறிவாலய மண்டபத்தில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வும், நினைவேந்தல் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் கனகையா ஸ்ரீ கிருஸ்ணகுமாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button