உலகம்
Trending

"நாங்கள் நிரபராதிகள்" நீதிமன்றில் மதுரோ தெரிவிப்பு!

அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் நியூயோர் நீதிமன்றத்தில் நேற்று(05) ஆஜர்படுத்தப்பட்டனர்.

போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கி சதி,
அழிவு கரமான சாதனம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்றைய தினம் நியூயோர்க் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

40 நிமிடம் இடம்பெற்ற குற்றவியல் விசாரணையின் போது நிக்கலோஸ் மதுரோவும் அவரது மனைவி சிரியா ஃப்ளோரசிடமும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.

நான் நிரபராதி, நான் ஒரு கண்ணியமான மனிதனென்று மதுரா இதன்போது கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button