
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று( 06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கல்மடுநகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே உயிரிந்துள்ளார்.
பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன்,
தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Follow Us



