இலங்கை
Trending

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சில ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடல் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் அகற்றப்படாத நிலையில் துர்நாற்றம் வீசக்கூடியதாக உருக்குலைந்து காணப்படுகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button