இலங்கை
Trending

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், ​​அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

திட்டமிடப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷிடம் மேற்கெள்ளப்பட்ட விசாரணையின்போது, ​​2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் டக்ளஸ் தேவானந்தவுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அது தொடர்பான விசாரணை இடம்பெற்று முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button