யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் (ஜெசாக்) ஏற்பாட்டில் ‘மாற்றுத் திறனாளி சிறார்களின் திறமைகளை வெளிப்படுத்தும் “இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு” யாழ்.கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் இன்று(11) இடம்பெற்றது.


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறார்கள் தங்கள் திறமைகளை இங்கு வெளிப்படுத்தினர்.

நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் வைத்தியர் ஆர்.சுரேந்திரகுமாரன்,யாழ்.போதனா வைத்தியசாலை உள நல மருத்துவர் எஸ்.சிவதாஸ்,
யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தார்.
Follow Us



