இலங்கைவடக்கு மாகாணம்
Trending

தையிட்டியில் தொடரும் போராட்டம் - பலர் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத அமைக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக இன்று(21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரை முன்பாக போராட்டம் இன்று(21) முன்னெடுக்கபட்டுவருகிறது.

குறித்த போராட்டத்திற்கு எதிராக 29 பேருக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்தநிலையில் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டபோது விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வேலன் சுவாமிகள் , வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதனால் போராட்ட களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு, போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button