
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், நீரை வெளியேற்றும்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமை காரணமாகவும் 69 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையிலும், கெற்போலி மற்றும் கச்சாய் பிரதேசங்களைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் கச்சாய் ஆரம்ப வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


34 குடும்பங்களை சேர்ந்த 128 பேர் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் மத்தியில் 10 வீடுகளும், நாவற்குழியில் ஒரு வீடுமாக 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.



இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுவருகிறது.
Follow Us



