
நுவரெலியா, கிரெகரி ஏரியில், நீர் விமானம் (sea flight) ஒன்று தரையிறங்கும் போது நேற்று(07) பிற்பகலில் விபத்துக்குள்ளாகியது.
இதன்போது விமானத்திலிருந்த
இரு விமானிகள் காயமடைந்தனர்.

அவர்களை ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Follow Us



