மாணவனின் 25 ஆயிரம் ரூபாய் முறைப்பாடு: கொடுப்பனவு வீட்டுக்கானதா? நபருக்கானதா? சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரல்!

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் கோரியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது கடந்த 10 ஆம் திகதி மாணவன் ஒருவர் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
மேலும் தாயின் பாராமரிப்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்து வருகின்ற தனக்கு வயது 16 தென்றும், புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,தனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று 3 மாதகாலமாகிவிட்டதென்றும்,
ஆகையால் எனது பாதுகாப்பு கருதி குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.
எனது அம்மம்மாவும் அங்கேயே இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் எனது தாயார் உள்ளார் என்றும்,
இந்த நிலையில் தாயாரே முழு குடும்ப சுமையையும் தாங்கி வருகிறார் என்றும்,
எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலந்துகொள்வதாகவும்,
ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை. வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளதென உறவினர் சென்று பர்வையிட்டு கூறினார்.
அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியை பெறுவதற்கு பதிவு செய்யுமாறு தாயார் கிராம சேவையாளரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கிராம சேவையாளர் மறுத்துவிட்டார்.
ஆனால்,குறித்த குடியிருப்பில் வாழாத குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார் என” தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



