
அண்மையில் இடம்பெற்ற அனர்த்த நேரத்தின் போது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஊழியர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் முகமாக மழை அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.



உபதவிசாளர் ஞா.கிஷோரின் ஒழுங்குபடுத்தலில் பிரான்ஸில் வசிக்கும் சுரேஷ் ஆனந்தின் நிதிப்பங்களிப்பில் சுமார் 25 மழை அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.



நகரசபைத் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உபதவிசாளர் ஞா.கிஷோர், உறுப்பினர் மு.கோகுல்றாஜ், செயலாளர் செ.நிசான், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் குணசாந்தன் உட்பட நகராட்சி மன்றின் அதிகாரிகள் கலந்துகொண்டு மழை அங்கிகளை வழங்கி வைத்தனர்.



Follow Us



