QR முறைமையின்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்வது வரை செல்லும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா எச்சரித்துள்ளார்.

கையிருப்பிலுள்ள மற்றும் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவுகளுக்கிடையே வித்தியாசம் காணப்பட்டால், கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அது அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது வரை செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கோ தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும், அதற்கமைய ஒவ்வொருவரும் QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எவராவது கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்கள் உங்களது உரிமையை இல்லாது செய்கிறார்கள் எனவும், எனவே உடனடியாக அதற்கு எதிராகச் செயல்படுமாறும் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் தலைவர் .ஜே. ராஜகருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்!
திருகோணமலை விபத்தில் குடும்பஸ்தர் பலி!
யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!
எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை!