உலகம்
Trending

அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததை உறுதிப்படுத்திய ஈரானிய அரச ஊடகம்!

ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்துள்ளதை அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதனையடுத்து ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அயத்துல்லா அலி கமெனி,

நேற்று (28) அதிகாலை தனது வீட்டிலுள்ள அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறை அதிநவீன அமைப்புகள் மூலம் அவரது இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தாக்குதல்களின் பின்னர், இடிபாடுகளுக்குள் இருந்த கமெனியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button