Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு......
உலகம்
Trending

மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் சில பகுதிகளிலுள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு பல நாடுகள் அறிவுறுத்திவருகின்றன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் தீவிரமடைந்து வருவதால் ஈரானுக்கு பயணம் செய்வதை ஒத்திவைக்க பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

இஸ்ரேல் மற்றும் லெபனானிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவர்களின் குடும்பங்களை பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி, இரு நாடுகளையும் விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்துயுள்ளது.

அத்துடன், ஐக்கிய அரபு இராட்சியம், ஜோர்டான் மற்றும் கட்டாரிலுள்ள அவுஸ்திரேலிய தூதர்களின் குடும்பத்தினரும் தாமாகவே முன்வந்து நாடு திரும்புமாறும் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஈரானிலுள்ள தனது நாட்டினரை விரைவில் வெளியேறுமாறு செர்பியா அறிவித்துள்ளது.

போலந்து குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டின் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே லெபனானிலுள்ள அமெரிக்க தூதரக அத்தியாவசியமற்ற ஊழியர்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

இதனிடையே, ஈரானிலுள்ள இந்தியத் தூதரகம், தற்போது ஈரானிலுள்ள தனது குடிமக்கள், வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்,ஈரானுக்குச் செல்லும் அனைத்துப் பயணங்களையும் தொடர்ந்து ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button