இலங்கை
Trending

நன்னடத்தை பாதுகாவல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நியமனம்!

வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் இன்று (30) வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண பிரதமர் செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சமுக சேவை உத்தியோகத்தர் தரம் இரண்டிற்கு 13 பேருக்கான நியமனங்களும், அலுவலக உதவியாளர்கள் 12 பேருக்குமான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண பிரதம செயலர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண வடக்கு நன்னடத்தை பாதுகாவல் மற்றும் கவனிப்பு சேவைகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now