இலங்கை
Trending

குருக்கள்மடம் சந்தேக மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் த. பிரதீபன் தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகளில் பொலிஸ் தடயவியல் அதிகாரிகள், அகழ்வாராய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையை முடித்துத் திரும்பிய 167 யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முன்வைக்கப்படும் சந்தேகத்தின் அடிப்படையில் இந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற முதற்கட்ட அகழ்வில் குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now