இந்தியா
Trending

அரசு மரியாதையோடு தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதிக் கிரியைகள்!

மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதிக் கிரியைகள் அவரின் சொந்த ஊரான ராணிப்போட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள மாங்காட்டில் அரச மரியாதையோடு இடம்பெற்றுவருகிறது.

தமிழ் திரையுலகில் கானா பாடல்களின் மன்னனாகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் விளங்கிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா, தனது 77 ஆவது வயதில் மாரடைப்பால் நேற்று (17) காலமாகியிருந்தார்.

அதனையடுத்து தேவாவின் உடல் சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது இல்லத்திற்குவருகைதந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் பொதுமக்கள் அஞ்சலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள மாங்காட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு இறுதிக் கிரியைகள் அரச மரியாதையோடு இடம்பெற்றுவருகின்றன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now