ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!


ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அருகதையும் இல்லை என ஈரானின் துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா அரேப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆளுநர்கள் குழு ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும், சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஈரான் உறுதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், ஹிரோஷிமா தாக்குதலை நடத்தியவர்களும், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியவர்களுமே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர் என மொஹமட் ரெசா அரேப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரானின் உள்கட்டமைப்புகளையும் நாகரிகத்தையும் அச்சுறுத்துபவர்களுக்கு நியாயம் பேசத் தகுதி கிடையாது என்று குறிப்பிட்ட அவர், ஈரானிய மக்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளுக்காகவும் அமைதியான அணுசக்திப் பாதையிலும் உறுதியாக நிற்பார்கள் என தெரிவித்துள்ளார்.




