
போப்பாண்டவர் 14 ஆம் லியோனின் பிரான்ஸ் விஜயத்தை முன்னிட்டு, பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்திற்காக 15 ஆயிரம் பாதுகாப்பு பிரிவினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பிரானஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில், பொதுமக்கள் அதிகளவில் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் என்பதால் 14 ஆயிரம் பாதுகாப்பு பிரிவினரை பாரிஸில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, போப்பாண்டவரின் வருகைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக லூர்த் நகரில் சுமார் ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
செப்டெம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும், போப்பின் பயணத்தை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.





