இலங்கை
Trending

தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!

தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!

அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

“KM Garuda Jaya VI” என்ற இந்தோனேசிய மீன்பிடி இழுவைப் படகு, கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே கடலில் கவிழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடம்பெற்றதோடு, படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக ஆரம்பத்தில் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, MV Moonstone என்ற வர்த்தகக் கப்பல் கடலில் தத்தளித்த 25 பேரையும் மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.

அதற்கமைய கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் இரண்டு கடற்படைப் படகுகளை அனுப்பி, MV Moonstone கப்பலால் மீட்கப்பட்ட 25 கடற்றொழிலாளர்களையும் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now