
யாழ்ப்பாணம், இணுவில், காங்கேசன்துறை வீதி கந்தசாமி கோவில் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(22) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.


டிப்பர் வாகனமும், துவிச்சக்கர வண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 67 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் பயணித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Follow Us



