உலகம்
Trending

சிறு ஆயுதக் குழுக்கள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுவரும் ஈரான்!

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் அரசு தனது நாட்டில் சிறு ஆயுதக் குழுக்களின் கைது நடவடிக்கைகள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களைத் தீவிரமாக வெளியிட்டு வருகிறது.

இதன் மூலம், போரை ஒரு “தேசியப் பாதுகாப்புப் போராட்டமாக” சித்தரித்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது கட்டுப்பாட்டை வெளிப்படுத்த ஈரான் முயற்சிப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் நடந்த நாடு தழுவிய போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி, “ஜனாதிபதி எதிர்ப்பு” மற்றும் “ராணுவ ஆட்சியாட்சி ஆதரவு” குழுக்களைச் சேர்ந்தவர்களை, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை கைது செய்தது.

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதிகளில் ஈராக் எல்லையை ஒட்டி குர்திஷ் ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு அவை திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் தென்கிழக்கு எல்லைப் பகுதிகளில் பிரிவினைவாத பலோச் போராளிக் குழுவான ‘ஜெய்த் அல்-அத்ல்’ (Jaish al-Adl) பாதுகாப்புப் படையினருடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் குறித்த ஆயுதக்குழுக்களையும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈரானிய படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button