இலங்கை
Trending

பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்!

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று(08) அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எனவே, இதனை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளவாறு அந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அறிக்கையில் அச்சிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button