
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று (07) ஆரம்பமாகியுள்ளது.
இந்த அமர்வு இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தொடக்க உரையாற்றியுள்ளார்.
இதேவேளை, இலங்கை குறித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், சூடான்,வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் இந்த அமர்வுகளின்போது சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

Follow Us



