
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பொலிஸாரால் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Follow Us


