இலங்கை
Trending

90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து இன்று விலகல்!

நாட்டிலுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று (22) சேவையிலிருந்து விலகியிருந்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் நேற்றிரவு(21) அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக பேருந்துகளை இன்று(22) சேவையில் ஈடுபடுத்தாமலிருக்க தீர்மானித்ததாக அவர் கூறினார்.

புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும், இன்றைய தினத்துக்குள் அதற்கான தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button