உலகம்விளையாட்டு
Trending

பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின்போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது (Fatima Sana) சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அவரின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக என்ற சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷபாலி வெர்மாவை (Shafali Verma) ஆட்டமிழக்கச் செய்த பின்னர், பாத்திமா சனா ,பார்வையாளர் அரங்கை நோக்கி முறையற்ற விதத்தில் சைகை காட்டியுள்ளார்.

இது ஐ.சி.சி நடத்தை விதிகளின் கீழ் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமது தவறை ஒப்புக்கொண்ட சனாவுக்கு அபராதத்துடன், அவரது ஒழுக்கப் பதிவேட்டில் 1 தகுதிக்குறைப்புப் புள்ளியும் (demerit point) சேர்க்கப்பட்டுள்ளது.

இது, கடந்த 24 மாதங்களில் அவர் பெறும் இரண்டாவது குற்றமாக பதிவாதியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button