இலங்கை
Trending

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!

யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு பாடசாலை மாணவியான அவரது மகள் படுகாயமடைந்துளார்.

இந்தச் சம்பவம் இன்று (23) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையிலிருந்து மகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை புங்கன்குளத்திலுள்ள ரயில் கடவையை கடந்தபோது ரயிலுடன் மோதுண்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button