சுவிஸ்
Trending

சுவிஸ் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதி கய் பார்மலின், தனது பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனது உடல்நிலை காரணம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஃபெடரல் கவுன்சிலே நாட்டை நிர்வகிக்கிறது.

இந்த ஏழு உறுப்பினர்களும் ஆண்டுதோறும் ஒவ்வொருவராக ஜனாதிபதி பதவியை வகிப்பர்.

2015ஆம் ஆண்டு அரசில் இணைந்த கய் பார்மலின், பாதுகாப்புத்துறை மற்றும் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அவர் டிசம்பர் 31ஆம் திகதி இரவு 11.59 மணியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button
✕ Tamil World Matrimony Register Now