உலகம்சுவிஸ்விளையாட்டு
Trending

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஜேர்மனி அணி வெற்றி!

சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான Friendlies கால்பந்து போட்டியில் ஜேர்மனி வெற்றி பெற்றது.

ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான Friendlies கால்பந்து போட்டி செயின்ட் ஜேகப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே, சுவிஸ் வீரர் டேன் நோயி, கோல் அடித்து ஜேர்மனி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து ஜேர்மனியின் ஜோனதன் டா, 26வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார்.

பின்னர் 41வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ப்ரீல் எம்போலோ அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தார்.

அதற்கு பதிலடியாக 45ஆ’வது நிமிடத்தில் ஜேர்மனியின் செர்ஜ் ஞாப்ரே தனியாளாக பந்தை தூக்கிவிட்டு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஜேர்மனி தரப்பில் அடிக்கப்பட்ட கோல் பார்வையாளர்களை மிரள வைத்தது.

கார்னரில் இருந்து செர்ஜ் ஞாப்ரே பாஸ் செய்த பந்தை உடனே விர்ட்ஸ், இடதுபுறத்தில் இருந்து கடினமான கோணத்தில் நீண்ட தூரத்தில் இருந்து தனது வலது காலால் அடித்து கோலாக மாற்றினார்.

79வது நிமிடத்தில் சுவிஸின் ஜோயல் மொன்டெய்ரோ அபாரமாக செயல்பட்டு கோல் அடிக்க, கோல்கள் சமன் ஆனதால் போட்டியில் பரபரப்பானது.

ஆனால், அடுத்த 6 நிமிடங்களில் ஜேர்மனி வீரர் ஃப்ளோரியன் விர்ட்ஸ் (Florian Wirtz) கோல் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார்.

ஜேர்மனி அணி ஆட்டநேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now