உலகம்சுவிஸ்
Trending

அமெரிக்க போர் விமானங்கள் தனது வான் பரப்பை பயன்படுத்த தடைவிதித்த சுவிஸ்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலை’ கொள்கையின்படி, போரில் ஈடுபடும் எந்தவொரு தரப்பும் இராணுவ நோக்கங்களுக்காகத் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாதென பெடரல் கவுன்சில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து விமானப் பயணக் கோரிக்கைகளில், இராணுவ நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு உளவு விமானங்களுக்கான அனுமதியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடியாக நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், போருடன் நேரடித் தொடர்பில்லாத மனிதாபிமானப் பணிகள், மருத்துவ உதவிப் போக்குவரத்து மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஏனைய மூன்று விமானங்களுக்கு மட்டும் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button