இலங்கைவடக்கு மாகாணம்
Trending

நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் 09 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்த இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button