உலகம்
Trending

முதுகு சொறியும் தொழிலில் லட்சக்கணக்கில் இலாபம் ஈட்டும் சீன இளைஞர்!

சீனாவில் முதுகு சொறியும் சேவையை ஒரு தொழில் முனைவோர் வணிகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா என்பவரால் ‘சுமா’ என்ற பெயரில் இந்த நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த சேவையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக நகங்களைக் கொண்டு உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுவார்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படும் இந்த சேவைக்கு ஆண்களே அதிகளவில் வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் கண்ட ஒரு காணொளியும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்த தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகமாக இருந்ததாக ஜாங் தெரிவித்துள்ளார்.

தற்போது இரண்டு கிளைகள் மூலம் மாதந்தோறும் சுமார் ஒரு இலட்சம் யுவான் வரை வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம் இலாபகரமாக இயங்கி வருகிறது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button