
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை 2.30 முதல் இந்த போர் நிறுத்தம் அமுலாகியுள்ளது.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது அமைதிக்கான ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க” வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.
நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு, போர்நிறுத்தத்திற்கு முன்னதாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது.

Follow Us



