அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!

அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் சாவகச்சேரி நகரில் உண்ணாவிரத போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், செம்மணி மனித புதைகுழிக்கும் சர்வதேச விசாரணை வேண்டும்”, “உள்ளூராட்சி சபைகளை முடக்கும் பிரஜா சக்தி முறைமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”, ” இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்”

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டம், மாலை 5.00 மணி வரை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இந்தப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version