யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ்.அரியாலைப் பகுதியில் இன்று(10) முற்பகலில் இடம்பெற்றுள்ளது.
தண்டவாளத்தை குறுக்கறுத்து வீதியை கடக்க முற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில், முத்தமிழ் வீதி,யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த இளைஞர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!