அழகுசாதனப் பொருட்கள் சமாசாரங்களைத் தவிர, கெஹல்பத்தர பத்மேவுக்கும், எனக்கும் வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை என பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில், நடிகை பியூமி ஹன்சமாலியுடன் உரையாடல்கள் காணப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.
அதனையடுத்து நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று(22) விசாரணை நடத்தினர்.
இதன்போது வாக்குமூலமளித்த நடிகை பியூமி ஹன்சமாலி,
“அவர் அழகாக மாற விரும்புவதாக என்னிடம் சொன்னார். அதற்கு – எனது தயாரிப்புக்களைப் பயன்படுத்துமாறு, அவருக்கு நான் கூறினேன்.
அழகுசாதனப் பொருட்கள் சமாச்சாரங்களைத் தவிர, வேறு எந்தத் தொடர்புகளும் எங்களுக்குள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கெஹல்பத்தர பத்மேவிற்கும்,நடிகை பியூமி ஹன்சமாலிக்கும் இடையிலான சந்திப்பு
துபாயில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!