ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்த்து என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று(08) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஒரு வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமானதாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த விசாரணைகளில், ஈஸ்டர் தாக்குதல் குறித்த தகவல் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு முற்கூட்டியே முழுமையாக தெரிந்திருந்தமை தெளிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், விசாரணைகளுக்குத் தேவையான நபர்களைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதெனவும்,சுரேஷ் சாலே குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மனிக்கும் எனவும்
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!