இலங்கைவிளையாட்டு
Trending

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில், வெளிநாட்டு பயிற்சியாளர்களோடு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லே டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையை அடையும் வரை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்ச் மாதம் நடைபெற்றவுள்ள போட்டிகளுக்கு முன்னதாக புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button