வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கு தமது வான்பரப்பைப் பயன்படுத்தவோ அல்லது இராணுவத் தளங்களை வழங்கவோ அனுமதிக்கும் நாடுகள், ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனத் தூதரக ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, 48 மணித்தியாலத்துக்குள் ஈரான் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் அமெரிக்கா தாக்கித் தகர்க்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்தே, ஈரான் அமெரிக்காவுக்கு குறித்த பதிலடி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈழப் பெண்ணின் உலக சாதனை!
தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
T20 கிரிக்கெட்டில் 15 வயது ருவாண்டா வீராங்கனை உலக சாதனை!
யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!