கொழும்பை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் தரித்துநின்ற
ஈரான் நாட்டு (IRIS Bushehr) கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் நாட்டு IRIS Bushehr கப்பல் பாதுகாப்பாக திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈரான் கடற்படைக் கப்பல், முன்தாகவே இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதியை கோரியிருந்தது.
இந்த நிலையில், மனிதாபிமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்!
இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்:ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி: 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்!